சசிகலாவின் பினாமி எனக்கூறி, தன்னுடைய சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கம் செய்வதாக நிதி நிறுவன உரிமையாளர் வி.எஸ்.ஜே. தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'சென்னை பெரம்பூரில் கங்கா ஃபவுண்டேஷன்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம் மால் கட்டடத்தின் ஒரு கடையையும், 11 ஆயிரத்து 135 சதுர அடி நிலத்தையும்தான் வாங்கினேன்.
கடந்த 2017ஆம் ஆண்டு வி.கே. சசிகலா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக எனது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
ஸ்பெக்ட்ரம் மாலில் உள்ள சொத்துகளை 18 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும், பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்களை பெற்றிருந்ததாகவும் வருமான வரித்துறை தரப்பில் குற்றம் சாட்டினர். .