தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’விவேக் மரணம் பல கேள்விகளுக்கு இடமளித்துள்ளது’: திருமாவளவன் பரபரப்பு ட்வீட்! - நடிகர் விவேக் மரணம்

நடிகர் விவேக் மறைவிற்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் மறைவிற்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் இரங்கல்
நடிகர் விவேக் மறைவிற்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் இரங்கல்

By

Published : Apr 17, 2021, 1:09 PM IST

நடிகர் விவேக் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரே அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது என்று தகவல் பரவத் தொடங்கியது. ஆனால் நடிகர் விவேக்கின் உடல்நிலை பாதிப்பிற்கும் கரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் விவேக் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

’விவேக் மரணம் பல கேள்விகளுக்கு இடமளித்துள்ளது..’: திருமாவளவன் பரபரப்பு ட்வீட்!


நடிகர் விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய மறைவு பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது. கரோனா தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். அவருக்கு எமது அஞ்சலி என தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details