தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கௌரவ விரிவுரையாளர் பணி இடஒதுக்கீடு; பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளிகள் விரைவில் போராட்டம் - பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளிகள்

தமிழ்நாடு முழுவதும் உள்ள பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து தங்களின் 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

கௌரவ விரிவுரையாளர் பணி இடஒதுக்கீடு; பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளிகள் விரைவில் போராட்டம்
கௌரவ விரிவுரையாளர் பணி இடஒதுக்கீடு; பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளிகள் விரைவில் போராட்டம்

By

Published : Dec 27, 2022, 10:36 PM IST

கௌரவ விரிவுரையாளர் பணி இடஒதுக்கீடு; பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளிகள் விரைவில் போராட்டம்

சென்னை:தமிழ்நாடு முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,685 பணியிடங்களில் கௌரவ விரிவுரையாளர் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்களை நியமனம் செய்வதற்கான வழிமுறைகளில் பார்வையற்றவர்களுக்கு எந்தவித முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு கௌரவ விரிவுரையாளர் பணியிடத்தில் அரசு ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், கடந்த இரண்டு நாட்களாக சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் தொடர் போராட்டத்தை மேற்கொண்டனர். பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு இட ஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை என அப்பொழுது குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இன்று நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கௌரவ விரிவுரையாளர் நியமனத்தில் 19 பணியிடங்களில் பார்வையற்ற பட்டதாரிகளை நியமிக்க கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதனை ஏற்று தற்காலிகமாக தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்று பார்வையற்ற பட்டதாரிகள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சிங்காரவேலன் கூறும்போது, ”அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பார்வையற்ற பட்டதாரிகளுக்கு ஒரு சதவீத இட ஒதுக்கீட்டின்படி நியமனங்கள் நடைபெறவில்லை.

எங்களுக்கு 99 பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும். எனவே எங்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இரண்டு நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தினோம். அதன் விளைவாக 19 கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களில் நியமனம் செய்வதற்கு கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

அதனை ஏற்று எங்களின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். கடந்த காலம் முதல் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்றித் தர வேண்டும். எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையற்ற பட்டதாரிகள் உட்பட பார்வையற்றவர்களை ஒன்றிணைத்து விரைவில் போராட்டம் நடத்துவோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ETV Bharat 2022 Roundup: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செய்ததும், செய்யத் தவறியதும்!

ABOUT THE AUTHOR

...view details