கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனைக் கட்டுப்படுத்த எவ்வித தளர்வுகளுமின்றி மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய மருத்துவ உபகரணங்கள் வெளிநாடுகளிலிருந்து சென்னை வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்த சரக்கு விமானத்தில் 63 பாா்சல்களில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பிற்கான மருத்துவ உபகரணங்கள் வந்தன. அதில் உயிர்க்காக்கும் சுவாசக் கருவியான வென்ட்டிலேட்டர்கள் தயாரிப்பதற்கான உதிரி பாகங்கள் தாய்வான் நாட்டிலிருந்தும், அதிநவீன தொ்மா மீட்டர்கள் சீனாவிலிருந்தும் வந்தன.