சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் விஷால் நடிப்பில் எனிமி திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதைத் தொடர்ந்து விஷாலின் 32ஆவது திரைப்படத்தில் இளைய திலகம் பிரபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
வித்தியாசமான கதை அம்சம்கொண்ட இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இரண்டாவது முறையாக சுனைனா நடித்துவருகிறார். இப்படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ரமணா - நந்தா இணைந்து தங்களது ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கின்றனர்.