காட்சித் தொடர்பியல் குறித்து மக்களுக்கு தெரியச் செய்திடும் வகையில் சுவர் சித்திரம் வரையும் போட்டி மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில், சென்னையிலுள்ள எட்டு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று சுவர் ஓவியம் வரைந்தனர்.
அந்தக் கல்லூரியின் சுற்றுச்சுவரில் 'இயற்கையும் சமுதாயமும்' என்ற தலைப்பில் மாணவர்கள் சித்திரம் வரைந்தனர். இயந்திரமயமான காலக் கட்டத்தில் மனிதன் வாழ்ந்துகொண்டிருக்கும் இப்போது, இதுபோன்ற சுவர் சித்திரங்களை நின்று பார்க்கும்போது அது நேர்மறையான சிந்தனையை பார்ப்போருக்கு ஏற்படுத்தும் வகையில் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன.