ஆந்திர மாநிலம், விசாகபட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர். வெங்கடபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலை விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக பத்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வாயு 3 கி.மீ. சுற்றளவு வரை பரவி இருப்பதால், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:விபத்து ஏற்பட்ட விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலை யாருடையது?
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ”விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவு ஏற்பட்டு, பலர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
இதையும் படிங்க:விஷவாயு விபத்து செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்' - ராகுல் காந்தி
மேற்படி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இவ்விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு: நிலைமையை கண்காணித்து வருகிறோம் - பிரதமர் மோடி