சென்னை:கொல்கத்தாவில் உள்ள இந்திய இன்ட்ஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியா என்ற மத்திய அரசின் நிதி நிறுவனத்தில், விருதுநகர் மணப்புரத்தைச் சேர்ந்த பாண்டியன் எக்ஸ்ட்ராக்ஷன் என்ற நிறுவனம் 1992ஆம் ஆண்டு 62 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தது.
கடன் தொகையைச் செலுத்தாததால் கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வங்கி தொடர்ந்த வழக்கில், வட்டியுடன் சேர்த்து ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் செலுத்த தமிழ்நாடு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் ஒரு முறை செட்டில்மென்ட் அடிப்படையில் 14 லட்ச ரூபாயை மட்டும் செலுத்தும் நிறுவனத்தின் முடிவை 2010ஆம் ஆண்டு ஐஐபிஐ வங்கி ஏற்றது.
நிறுவனத்தின் மனு தள்ளுபடி
வங்கியின் செட்டில்மென்ட் முடிவை மத்திய நிதி அமைச்சகத்தின் குழு ஏற்காததால், தீர்ப்பாயம் நிர்ணயித்த தொகையைத் திரும்பச் செலுத்துமாறு தனியார் நிறுவனத்திற்கு வங்கி நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசை எதிர்த்து நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதிசெய்து, நிறுவனத்தின் மனுவை கடந்த டிசம்பர் மாதம் தள்ளுபடி செய்திருந்தார்.