தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சித்தேரி ஏரி அருகே காதல் ஜோடிகளை தாக்கிய இளைஞர்கள்.. வெளியான பரபரப்பு வீடியோ காட்சிகள்! - love couple fighting

வேங்கைவாசல் சித்தேரிக்கு செல்லும் காதல் ஜோடிகள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 9:31 PM IST

காதல் ஜோடிகளை தாக்கிய இளைஞர்கள்

சென்னை: மேடவாக்கம் அடுத்த வேங்கைவாசல் சித்தேரி பகுதியிலுள்ள ஏரியை ஒட்டி, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அருகில் உள்ள தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் ஜோடி ஜோடியாக அமர்ந்து பொழுதைக் கழிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (ஆக.30) காலை 11 மணியளவில் ஒரு ஜோடி சித்தேரி பகுதிக்குச் சென்றுள்ளது. அப்போது அவர்களை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள், அப்பெண்ணின் ஆண் நண்பரைச் சரமாரியாகத் தாக்கினர்.

அப்பெண் அவர்களிடம் கெஞ்சியும் அவர்கள் தாக்குவதை நிறுத்தவில்லை. இளைஞரைத் தாக்கிய பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து சென்றது. இதனைத் தொடர்ந்து, அடிவாங்கிய இளைஞர் திடீரென தன்னுடன் இருந்த தோழியைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார். பின்னர், அந்த ஜோடி அங்கிருந்து சென்றது.

சிறிது நேரத்தில் அதே போல் மற்றொரு ஜோடி ஒன்று அங்குச் சென்றது. அந்த ஜோடிக்கு இடையேயும் தகராறு ஏற்பட்டது. அப்போது அப்பெண்ணுடன் வந்த ஆண் நபர் அப்பெண்ணைத் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் நடைபாதை பாலத்தின் மீது இருந்து பெண்ணை தூக்கித் தள்ளி விட முயன்றார்.

இதனைக் கண்ட அப்பகுதிவாசிகள் சத்தம் போடவே அங்கிருந்து அவர்கள் சென்றனர். இது குறித்த பகுதி மக்கள் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த இடத்தில் சிலர் ஒன்று கூடி மது அருந்துவது, தாக்குவது என தொடர் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதாகவும், அதனைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:"மண்டமேல இருக்க கொண்டைய மறந்துட்டோமே".. ஏடிஎம்மி கொள்ளை அடிக்க முயன்ற நபர் சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details