கடந்த 20ஆம் தேதி பெங்களூருவிலிருந்து கொச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கேரள அரசுப் பேருந்து திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே சென்றுகொண்டிருந்தபோது சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் பெண்கள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர், 25 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஜோஃபி பாலும் ஒருவர்.
இவர், பெங்களூருவில் உள்ள ஜோய் ஆலுகாஸ் நகைக்கடையில் மேலாளராகப் பணியாற்றிவந்தவர். அதற்கு முன் அவர் மைசூரு கிளையில் பணியாற்றினார். அங்கு பணியாற்றிய அவரை பெங்களூரு கிளைக்கு மாற்றப்பட்டதை அறிந்த அவரின்கீழ் பணிபுரிந்த ஊழியர்கள், அவரைப் பிரிய மனமில்லாமல் கட்டியணைத்து, காலில் விழுந்து பிரியாவிடை அளித்துள்ளனர்.