சென்னை: ஆவடியில் இருந்து சஞ்சீவ் நகர் பகுதியை நோக்கி, அரசு சிற்றுந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது பேருந்து நிறுத்தத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தில் ஏறினார்கள். பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், சில மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.
அங்கிருந்து புறப்பட்ட சிறிதுநேரத்தில் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர் ஒருவர் கால்களை தரையில் தேய்த்த படி சாகசம் செய்துகொண்டு சென்றுள்ளார். அப்போது அந்த மாணவன் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தான். நல்வாய்ப்பாக, கீழே விழுந்த மாணவன் கனரக வாகனங்கள் எதுவும் பின்னால் வராத காரணத்தால் உயிர் தப்பினான்.