தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"என் மனைவியுடன் தனியா பப்புக்கு எதுக்கு போனீங்க" டாக்டர் பிரபு திலக்கின் பரபரப்பு ஆடியோ..! - doctor prabu thilak viral audio

தனது மனைவியோடு தொடர்பில் இருப்பதாக ஓய்வு பெற்ற ADSP மீது நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் டிஜிபியின் மகனும், திரைப்பட தயாரிப்பாளருமான டாக்டர் பிரபு திலக் காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், டாக்டர் பிரபு திலக்கும் ஓய்வு பெற்ற ADSP சங்கரும் தொலைபேசியில் பேசி கொண்ட ஆடியோ வெளியாகி பரபரப்பாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 17, 2023, 5:18 PM IST

டாக்டர் பிரபு திலக் மற்றும் ADSP சங்கர் பேசிய வைரல் ஆடியோ

சென்னை: ஓய்வு பெற்ற தமிழக டிஜிபி திலகவதியின் மகன் டாக்டர் பிரபு திலக். இவர் "வால்டர், அடுத்த சட்டை" உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர் ஆவார். இந்த நிலையில் தன்னுடைய மனைவிக்கும் ஓய்வு பெற்ற காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (ADSP) சங்கர் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல்துறை தலைமை அலுவலகத்தில் பிரபு திலக் புகார் அளித்துள்ளார்.

நாகை மாவட்ட கடலோர பாதுகாப்பு படையின் ஏ.டி. எஸ்.பி.யாக பணிபுரிந்து வந்த சங்கர் கடந்த மாதம் 31ஆம் தேதி பணி ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வு பெற்ற ADSP சங்கர், பணியில் இருக்கும்போது தனது மனைவியை அடிக்கடி பப்-க்கு (மதுபான கூடத்திற்கு) அழைத்துச் சென்று இருவரும் தவறாக நடந்து கொண்டதாக பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.

இது தொடர்பாக திலகவதி ஐபிஎஸ்-ன் மகன் டாக்டர் பிரபு திலக், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஏடிஎஸ்பி சங்கரிடம் தொடர்பு கொண்டு பேசியபோது பப்-க்கு இருவரும் மது குடிக்க சென்றது உண்மைதான் எனவும் ஆனால் தவறான ரீதியில் அவர்கள் செல்லவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சக வியாபாரிக்கு கத்திக்குத்து.. நரிக்குறவப் பெண் அஸ்வினி கைது!

ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சங்கரும், திரைப்பட தயாரிப்பாளரும், தமிழகத்தின் முன்னாள் டிஜிபியின் மகனுமான பிரபு திலக் ஆகியோர் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடந்த ஆண்டு டாக்டர் பிரபு திலக்கின் மனைவி, அவர் மீதும் அவரது தாயார் முன்னாள் தமிழக டிஜிபி திலகவதியின் மீதும் வரதட்சணை கொடுமை செய்வதாகவும், மற்றும் டாக்டர் பிரபு திலக் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், மேலும் தன்னை அடித்து கொடுமை படுத்தியதாகவும் சேலம் காவல் ஆனையரிடம் புகார் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இளைஞரை வெட்டிக் கொன்று ஆற்றில் வீச்சு.. தந்தை, மகள் உள்பட 8 பேர் கைது - தஞ்சாவூரில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details