சென்னை:கரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் உணவகங்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் உட்பட அனைத்து நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு http://covid19.chennaicorporation.gov.in/covid/marriagehall/ என்ற இணையதளத்தின் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும் என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கரோனா விதிமீறல் - அபராதம்
அதன்படி, இதுநாள்வரை திருமணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பதிவு செய்யப்பட்ட 2,812 மண்டபங்கள், உணவகங்களில் மாநகராட்சி வருவாய்துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டதில் 54 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு இதுவரை 2 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி எச்சரிக்கை
மே மாதம் முதல் இதுநாள்வரை கரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள், தனிநபர்களிடமிருந்து ரூ.3.70 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, பிரிவு 51 முதல் 60ன்படியும், இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 188ன்படியும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 1,964 பேருக்கு கரோனா