சென்னை:தமிழ்நாடு அரசு மற்றும் வியட்நாமின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளரான வின்பாஸ்ட் நிறுவனத்தின் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து வின்பாஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் வின்பாஸ்ட் நிறுவனம் அமைய உள்ளது. இதற்காக முதல் கட்டமாக 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டைக் கொண்டு செயல்பட உள்ளது. இந்த முன்னெடுப்பு காரணமாக வின்பாஸ்ட் நிறுவனம், உலகின் மூன்றாவது வாகனச் சந்தை விரிவு செய்யப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமையவுள்ள வின்பாஸ்ட் நிறுவனம், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது. ஆலையின் கட்டுமானப் பணி, 2024ஆம் அண்டு தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் உள்நாட்டில் சுமார் 3,000 - 3,500 வேலைவாய்ப்புகளை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் வளர்ச்சி வாய்ப்புகளைப் பெறுவதையும், மின்சார வாகனச் சந்தையை வேகமாக விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், வின்பாஸ்ட் நிறுவனம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X வலைத்தளப் பக்கத்தில், "உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதி செய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் மின்சார வாகனம் மற்றும் மின்கலன் உற்பத்தி தொழிற்சாலையை வின்பாஸ்ட் நிறுவனம் அமைக்கவுள்ளது. இது வெறும் முதலீடு அல்ல, தென் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்!