தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விநாயகர் ஊர்வலம்: தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு!

சென்னை: பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கும் ஊர்வலம் நடத்தவும் தடை விதித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விநாயகர்
விநாயகர்

By

Published : Sep 8, 2021, 1:04 PM IST

சென்னையைச் சேர்ந்த இல.கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொது நல வழக்கில், ஆகஸ்ட் 30ஆம் தேதி தமிழ்நாடு அரசு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

மேலும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (செப்.08) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் குறைந்தபட்சம் ஐந்து பேரையாவது அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சென்னை உயர் நீதிமன்றம்

இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மத உரிமைகளைப் பின்பற்ற வாழ்வாதார உரிமை முக்கியமானது என்றும், பொதுநலன் கருதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:கரோனா தொற்று பரவல் : மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details