தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 13, 2021, 1:03 PM IST

ETV Bharat / state

அமைதியான முறையில் முடிந்த விநாயகர் சதுர்த்தி - காவல் துறையினர் மகிழ்ச்சி

சென்னை பெருநகர காவல் துறை எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, விநாயகர் சதுர்த்தியை அமைதியாக நடத்த முடிந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி

சென்னை:கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 343 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

அதே நாளில் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினரால் சுமார் 217 சிலைகளை எடுத்துச் சென்று சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர், பட்டினப்பாக்கம் கடற்கரைகளிலும்; போரூர், பள்ளிக்கரணை, தாம்பரம், நந்தம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள ஏரிகளிலும் குளங்களிலும் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

இதில் எஞ்சியுள்ள 126 சிலைகளில், 11ஆம் தேதி அன்று நான்கு சிலைகளும், நேற்று (செப்டம்பர் 12) 122 சிலைகளும் பகுதி வாரியாக கரைக்கப்பட்டன. இது குறித்து சென்னை காவல் துறையினர் தெரிவித்ததாவது, “சென்னை பெருநகர காவல் துறை உரிய முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் அமைதியாக நடந்து முடிந்தது” என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details