தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயஸ்ரீ கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி வழக்கு - case filed request to transfer CBI investigation,

விழுப்புரம்: முன்விரோதம் காரணமாக சிறுமி எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

court
court

By

Published : May 13, 2020, 1:38 PM IST

சென்னை ஆவடியைச் சேர்ந்த சுமதி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ”விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரையில் முன்விரோதம் காரணமாக 14 வயது சிறுமி ஜெயஸ்ரீயை, அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன், கிளைச் செயலாளர் கலியபெருமாள் ஆகிய இருவரும் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த சிறுமி ஜெயஸ்ரீ, இறப்பதற்கு முன்பு அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால், அவர்கள் இருவரும் ஆளுங்கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் தமிழ்நாடு காவல் துறை விசாரித்தால் வழக்கில் நியாயம் கிடைக்காது. எனவே வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு மனு அனுப்பியுள்ளதாகவும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு அவசர வழக்குகளை விசாரணை செய்யும் நீதிபதிகள் முன்பு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:ஜெயஸ்ரீ கொலை வழக்கு: நியாயம் கேட்டு போராட முயன்ற வழக்கறிஞர் நந்தினி கைது!

ABOUT THE AUTHOR

...view details