தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'டாஸ்மாக் கடைகள் வேண்டாம்' என கிராம பஞ்சாயத்து தீர்மானம் நிறைவேற்றினாலும் செல்லாதாம்? - சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

சென்னை: கிராம பஞ்சாயத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பால் நடத்தப்படுவது இல்லை என்பதால், தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் எனத் தீர்மானம் நிறைவேற்றினாலும் அதற்கு அதிகாரம் இல்லை என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என கிராம பஞ்சாயத்து தீர்மானம் நிறைவேற்றினாலும் செல்லாதாம்?
டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என கிராம பஞ்சாயத்து தீர்மானம் நிறைவேற்றினாலும் செல்லாதாம்?

By

Published : Feb 27, 2020, 6:50 PM IST

டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி கார்த்திகேயன், நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவருகிறது.

முன்னதாக வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் கடைகள் தங்கள் பகுதிக்கு வேண்டாம் என்று கிராம பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றினால் அதைச் செயல்படுத்துவது தொடர்பாகச் சட்டம் கொண்டுவருவது பற்றி அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் அறிக்கையில் மதுபான கடைகளுக்குத் தடைவிதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு மற்ற மாநிலங்களில் தடையும் விதிக்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் ஏன் சாத்தியமில்லை? டாஸ்மாக் கடைகளை வேண்டாம் என கிராம சபை கூட்டத்தில் மக்கள் தீர்மானம் நிறைவேற்றினால் அதை நடைமுறைப்படுத்துவதில் அரசு தயக்கம் காட்டுவது ஏன்?

அரசின் கொள்கை முடிவாக மதுபானக்கடை இருந்தாலும், மக்களின் நலன்கருதி சில முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் சாத்தியமான ஒன்றை வருவாயை மட்டும் கருதி சாத்தியமல்லை என அரசு தெரிவிக்கிறது. டாஸ்மாக் கடைகள் எங்கே அமைக்க வேண்டும் என விதிகள் இருந்தாலும், வருங்கால தலைமுறையினரின் நலன்கருதி சில விதிகளையும் கொண்டுவரலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், தமிழ்நாடு அரசு அறிவிக்கும் திட்டங்களை சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து அனுமதித்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்ற நிலையில், கிராம பஞ்சாயத்தின் தீர்மானத்தை மட்டும் நிராகரிப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, தமிழ்நாடு அரசின் சார்பில் முன்னிலையான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்துக் கூட்டம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பால் நடத்தப்படுவது இல்லை.

அதனால் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினாலும் அதற்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்தார். வழக்கறிஞர் பாலு தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், குறிப்பிட்ட கிராமத்தில் உள்ள 15 விழுக்காடு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் எந்தத் திட்டத்தையும் ரத்துசெய்யலாம் எனக் கிராம பஞ்சாயத்து சட்டத்தில் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், டாஸ்மாக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கும் மதுவிலக்கு சுற்றறிக்கைக்குப் பதிலாக தமிழ்நாடு அரசு அதைச் சட்டத்திருத்தமாகக் கொண்டுவர உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க...'அவன் நல்லவனோ, கெட்டவனோ... என் மகன ஜெயிக்க வச்சான்... பதவி கிடைக்க தளபதிட்ட சொல்லிருக்கேன்' - சர்ச்சையில் துரைமுருகன்

ABOUT THE AUTHOR

...view details