சென்னை அடுத்த பல்லாவரத்தைச் சேர்ந்தவர் சங்கர் ராஜ் (47). தாம்பரம் அருகேயுள்ள பெருங்களத்தூர் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணிபுரிந்துவந்த இவர், தனது அலுவலகத்தின் பின்னால் இருக்கும் அரசுப் பள்ளியின் மைதானத்தில் நடைபயிற்சிக்குச் சென்றார்.
நடைபயிற்சி சென்ற சங்கர் ராஜ் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதையடுத்து நடைபயிற்சிக்குச் சென்ற பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் சென்று பார்த்தபோது, சட்டை கிழிந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சங்கர் ராஜ் சடலமாக கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கிராம நிர்வாக அலுவலர் உடனே பீர்க்கங்கரணை காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.