சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கரோனா நிவாரண நிதியாக ரூ.1.10 கோடி காசோலையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த வணிகர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். செருப்பு, நகைக் கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்ட கடைகளை விரைவில் திறக்க வேண்டும்.