சில நாள்களுக்கு முன்பு கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டுக்கு சென்ற தேமுதிக நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் விஜயகாந்த், உடல்நலக்குறைவால் நேற்றிரவு மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விஜயகாந்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்துக்கு கரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, சீரான திட்டமிடப்பட்ட தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.