நடிகர் விஜய் நடித்து இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. நெல்சன் இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் பீஸ்ட், இத்திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பல கோடி பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் பீஸ்ட் திரைபடத்தின் புதிய போஸ்டர்களை வெளியீட்டுள்ளது. பீஸ்ட் திரைப்படம் தமிழ் உள்பட தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.