சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த டிச.28-ஆம் தேதி காலை உயிரிழந்தார். பின்னர் தீவுத்திடலில் அவரது உடல் பொதுமக்கள் மரியாதை செலுத்த வைக்கப்பட்டு, கோயம்பேடு அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது வரை விஜயகாந்த் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்த் உயிரிழந்தது அவரது ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள், திரையுலகினர், பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் விஜயகாந்த் நினைவாக அவரது ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் அன்னதானம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், விஜயகாந்த்தின் எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தின் பெயரை விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் என்ற பெயரில் மாற்றப்பட்டுள்ளது.