சென்னை:சென்னை மியாட் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு கரோனா தொற்று உள்ளது என இன்று (டிச.28) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு கரோனா தொற்று இதனால், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காலை 9:00 மணியளவில் விஜயகாந்தின் உடல்நிலை குறித்த தகவல்களை அறிக்கையாக வெளியிடும் என கூறப்படுகிறது. இதேநேரத்தில் விஜயகாந்த், சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அங்கு 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, நேற்றுமுன் தினம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, கடந்த நவ.23ஆம் தேதி மியாட் மருத்துவமனை சார்பில் விஜயகாந்த் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், அவர் மருத்துவ சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைப்பதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கிடையே தேமுதிக பொதுச் செயலாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் தனது கணவரின் உடல்நிலை குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!