நடிகரும், தேமுதிக பொதுச்செயலாளருமான விஜயகாந்த் இன்று (ஆகஸ்ட் 25) தனது 68ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். கரோனா ஊரடங்கின் காரணமாக, தனது குடும்பத்தினருடன் விஜயகாந்த் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். தனது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் விஜயகாந்த் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், 'சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக கூட்டணியா, தனித்துப் போட்டியா என்பதை, அத்தருணத்தில் விஜயகாந்த் அறிவிப்பார்' எனத் தெரிவித்துள்ளார்.