தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்படி அளிக்கப்படும் நன்கொடைகள் ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், தடுப்பூசிகள், பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம்: தேமுதிக அறிவிப்பு - கரோனா தொற்று தடுப்புப் பணி
சென்னை: கரோனா தொற்று தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் இந்த வேண்டுகோளையடுத்து திரைப்பிரபலங்கள், தொழில் அதிபர்கள், பொதுமக்கள் என பலர் நிதியுதவி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், தேமுதிக சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், " கரோனா நோயை கட்டுப்படுத்த எதுவாக பல்வேறு மாவட்டங்களில் தேமுதிகவின் சார்பாக கரோனா நோயாளிகளுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்கியுள்ளோம். அதே போல் செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையாமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு ஏற்கனவே அறிக்கை மூலம் தெரிவித்திருந்தேன். மேலும் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தேன். இந்நிலையில், முதலமைச்சரின் கரோனா நிவராண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ. 10 லட்சம் வழங்க இருக்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.