கோயம்புத்தூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, இந்தத் தீர்ப்புக்கு தேமுதிக சார்பில் பாராட்டுத் தெரிவித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் இந்தத் தீர்ப்பை வரவேற்பதாகவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற செயல்களைச் செய்ய அஞ்சி வெட்கப்படக் கூடிய ஒரு சூழ்நிலையை இந்தத் தீர்ப்பு வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.