தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன்' - விஜயகாந்த் - டெபாசிட் இழந்த பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: மக்களின் தீர்ப்பை மனதார ஏற்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Vijayakant says wholeheartedly accept verdict & congratulation For Stalin
Vijayakant says wholeheartedly accept verdict & congratulation For Stalin

By

Published : May 3, 2021, 4:24 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வரும் மே 7-ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவரை வாழ்த்திய தேமுதிக தலைவர்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் முக ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ட்வீட் பதிவில்,

“சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மனதார ஏற்றுக் கொள்கிறேன்‍. தேர்தலில் உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன், தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கவுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

அமமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. முக்கியமாக, விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்தார்.

ABOUT THE AUTHOR

...view details