தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘பிரதான கட்சிகள் தேர்தல் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர்’ - விஜயதாரணி - congress mla vijayadharani

சென்னை: பிரதான கட்சிகள் தேர்தல் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளன என்று காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி தெரிவித்துள்ளார்.

vijayadharani
vijayadharani

By

Published : Dec 2, 2019, 3:39 PM IST

சென்னை தலைமை செயலகத்தில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், முதலமைச்சரை சந்தித்து, ரேஷன் அரிசி தட்டுப்பாடு பிரச்னை குறித்து கூறியதாகவும், குறிப்பாக கன்னியாகுமரியில் 2000 கிலோ ரேஷன் அரிசி விநியோகம் செய்யாமல் உள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், இம்மாதம் வரவேண்டிய அரிசியும் வரவில்லை எனவும், தேவையான அரிசி கிடைக்க, அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

மேலும், மத்திய அரசு ரேஷன் அரிசி விநியோகத்தை தடுக்க நினைப்பதாக குற்றம்சாட்டிய அவர் மாநில அரசு அதற்கு துணை போகக்கூடாது என்றும், அரிசி தட்டுப்பாடு குறித்து உரிய முடிவெடுக்க உள்ளதாக முதல்வர் உத்தரவாதம் அளித்ததாகவும் தீர்வு காணப்படாவிட்டால், போராட்டங்கள் நடக்கும் என்றும் திட்டவட்டமாக கூறினார்.

Vijayadharani Press Meet

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் தேர்தல் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளதாகவும், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது என்றும்,ஊராட்சிகளுக்கு மூன்று கட்ட தேர்தல் அறிவித்து உள்ளார்கள் இது என்ன மாதிரி தேர்தல் அறிவிப்பு என அதிர்ச்சியாக இருக்கிறது. முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவித்த அவர் மறைமுக தேர்தல் அறிவிப்பு, சட்டசபை கூட்டாமல் முடிவெடுக்கப்பட்டது உள்ளதாகவும் இந்த தேர்தல் யாரை திருப்திப்படுத்த நடத்துகிறார்கள் என்று புரியவில்லை என்றும் தவறான போக்கோடு, தேர்தல் அறிவித்து இருப்பது கண்டனத்திற்கு உரியது எனவும் அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details