தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கந்த சஷ்டி கவசம் படித்த விஜயகாந்த் - vijayakanth

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கந்த சஷ்டி கவசம் படிக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

vijayakanth
vijayakanth

By

Published : Jul 26, 2020, 8:20 PM IST

Updated : Jul 26, 2020, 10:45 PM IST

கந்த சஷ்டி கவசம் குறித்து கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கறுப்பர் கூட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கந்த சஷ்டி கவசம் படிக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், வருடந்தோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும், கந்த சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம். இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு, கந்த சஷ்டி கவசம் படித்தேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும், மற்றொரு ட்வீட்டில் ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம் என குறிப்பிட்டுள்ளார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் தற்போது கந்த சஷ்டி கவசம் படிக்கும் வீடியோவை பகிர்ந்ததை அடுத்து அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Last Updated : Jul 26, 2020, 10:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details