தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘கரோனா பரவலை தடுக்க தனித்திருங்கள்’ -அமைச்சர் விஜயபாஸ்கர்! - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பொதுமக்கள் அனைவரும் தனித்திருங்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர் பதிவிட்ட வீடியோ
அமைச்சர் பதிவிட்ட வீடியோ

By

Published : Mar 29, 2020, 7:05 PM IST

கரோனா வைரஸ் தாக்குதல் தமிழ்நாட்டில் அதிக அளவில் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

144 தடை உத்தரவு இருக்கக்கூடிய இந்நேரத்தில் சிறிய தகவல் தெரிவிக்கிறேன். உலக அளவில் கரோனா ஏற்படுத்திய பாதிப்பு, அரசுக்கு ஏற்பட்ட நிலை, மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை , நெருக்கடி இவற்றை அலசிப் பார்க்கும்போது இந்த நோயின் பரவல் வேகம் மிக மிக அதிகமாக உள்ளது.

இந்த கரோனா வைரஸ், ஒருவருக்கு வந்து, அது 9 பேருக்குச் சென்று, 99 பேருக்கு பரவி, அவர்களிடமிருந்து 999 பேரிலிருந்து, 9 லட்சம், 9 கோடி பேருக்கு பரவக்கூடிய கொடிய நோயாக உள்ளது.

உலகளவில் சீனா, தென்கொரியா, இத்தாலி, ஈரான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் முதல் 15 நாள்கள் பரவியுள்ளது. பிறகு அது மிகவும் வேகமாக பரவத்தொடங்கியது.

இது போன்ற நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான் சர்வதேச விமானம், உள்நாட்டு விமானம், போக்குவரத்து நிறுத்தம் என தொடங்கி 144 உத்தரவினை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் 21 நாள்கள் 144 தடை உத்தரவு போட்டுள்ளார். வைரஸ் 14 நாள்கள் இருக்கும். மேலும், அதில் இருந்து ஏழு நாட்கள் நாம் தனியாக இருந்தால் வைரஸின் தாக்கத்தைத் தடுக்கலாம். தற்போது வந்துள்ள நோயாளிகள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். இதனால் தான் பொதுமக்கள் வீட்டில் இருக்க வேண்டும் என கூறுகிறோம்.

உங்களுக்காக மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் முகக்கவசம் அணிந்து களத்தில் பணிபுரிகின்றனர். இந்நிலையில் நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதனை மீறினால் தண்டிக்கப்படுவீர்கள் என நாங்கள் அதிகாரத்துடன் கூறினாலும் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.

அமைச்சர் பதிவிட்ட வீடியோ

இதுபோன்று இருந்தால்தான் இந்தியாவையும், குடும்பத்தையும் காப்பாற்ற முடியும். உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின்படி சமச்சீரான உணவினை உண்டு, உடற்பயிற்சி செய்து குடும்பத்துடன் சந்தோஷமாக கழியுங்கள்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ஈரோட்டில் 6 பேருக்கு கரோனோ உறுதி' - ஆட்சியர் கதிரவன்

ABOUT THE AUTHOR

...view details