உலகைப் பயமுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தொற்றால் 3 லட்சத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதனைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் திணறி வந்தாலும், தங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் கையாண்டு வருகின்றன.
கரோனாவைத் தடுக்க அரசு பல கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டாலும், அதனைச் செம்மையாகச் செயல்படுத்தி இரவுபகல் பாராமல் உழைத்துக் கொண்டிருப்பவர்கள் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும்தான்.
அல்லும்பகலும் நோயாளிகளைக் காக்கப் போராடிய சீன மருத்துவர்களின் புகைப்படங்களை சீன அரசு வெளியிட்டிருந்தது. மக்கள் அனைவரையும் அப்புகைப்படங்கள் நெகிழ்ச்சியடையச் செய்தன. தங்கள் உயிரையும் துச்சமென மதித்து செயற்கரிய செயலைச் செய்யும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இன்று மாலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியில் வந்து கரவோசை எழுப்புமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
அதன்படி 5 மணிக்கு முன்னதாகவே மக்கள் அனைவரும் வெளியில் வந்து கை தட்டியும் ஒலி எழுப்பியும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அந்த வகையில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மருத்துவர்களின் சேவையைப் பாராட்டி தான் கைப்பட எழுதிய கவிதை ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் மருத்துவர்களை அவர் கை கூப்பி நன்றி தெரிவிக்கும் புகைப்படத்தையும் இணைத்துப் பகிர்ந்துள்ளார்.
'அழித்தொழிப்போம் உயிர்கொல்லியை'என்று தலைப்பிட்டு அவர் எழுதியுள்ள கவிதை பின்வருமாறு:
கரோனா, உலகை நடுங்க வைக்கும் ஒற்றைச் சொல்!
உலகமே பதறி கிடக்கிறது!
கண்ணுக்குத் தெரியாத இந்த உயிர்கொல்லியின்
வேகத்திற்கு எதிராக துணிந்து நிற்பது மட்டுமல்ல,
ஒவ்வொருவரும் இடைவெளி விட்டு தூர நிற்பதே