தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏடிஎம்மிற்கு கொண்டு சென்ற ரூ.52 லட்சம் பணத்தை அபேஸ் செய்த ஓட்டுநர் கைது! - வேளச்சேரியில் ஏடிஎம். மையத்தில் கொள்ளை

சென்னை: வேளச்சேரி அருகே ஏடிஎம் மையத்திற்கு கொண்டுசென்ற ரூ.52 லட்சம் பணத்தை கடத்திச் சென்ற கார் ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

convict
convict

By

Published : Dec 21, 2019, 3:19 PM IST

சென்னை விஜயா வங்கி ஏடிஎம் (தற்போது பாங்க் ஆஃப் பரோடா) மையங்களில் பணம் செலுத்த சி.எம்.எஸ் என்ற தனியார் நிறுவனம் சார்பில் நான்கு ஊழியர்கள் காரில் ரூ. 87 லட்சம் பணத்துடன் சென்றுள்ளனர். காரை வேளச்சேரியைச் சேர்ந்த அம்புரோஸ் (29) என்பவர் ஓட்டிச் சென்றார். ஊழியர்கள் முதலில் தேனாம்பேட்டையிலுள்ள விஜயா ஏடிஎம் மையங்களில் 30 லட்சம் ரூபாய் பணத்தை நிரப்பிவிட்டு வேளச்சேரி வந்துள்ளனர்.

பின்னர், வேளச்சேரி விஜயநகர் ஒன்றாவது பிரதான சாலையிலுள்ள விஜயா வங்கி ஏடிஎம்மிற்கு பணம் நிரப்ப மூன்று ஊழியர்கள் ஏடிஎம் உள்ளே சென்றனர். அப்போது திடீரென கார் ஓட்டுநர் சுமார் ரூ.52 லட்சம் பணத்துடன் காரை எடுத்துச் சென்றுள்ளார்.

பின்னர் காரை ஓட்டிச்சென்ற அம்புரோஸ் மீது வேளச்சேரி காவல் நிலையத்தில் ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தனிப்படை காவல் ஆய்வாளர் பிாின்ஸ் ஆருன் தலைமையில் காவலர்கள் அவரைத் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் அம்புரோஸ் திருவாரூர் மாவட்டத்தலுள்ள அவரது மாமனாரின் வீட்டில் தங்கியிருப்பதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை காவல் துறையினர் அம்புரோஸை நேற்றிரவு கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: குடிபோதையில் தந்தையை கொலை செய்த மகன் தலைமறைவு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details