சென்னை: நடிகர் விஜய் சேதுபதி சாதாரண துணை நடிகராக இருந்து நாயகனாக உயர்ந்தவர். கதாநாயகனாக நடிக்க தொடங்கி மாஸ்டர், விக்ரம் படங்களில் வில்லனாக மிரட்டியவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என மொழி கடந்து ரசிக்கப்படுபவர்.
ஆரம்பக் காலத்தில் ஒல்லியாக இருந்த விஜய் சேதுபதி, அதனை தொடர்ந்து சமீபத்திய படங்களில் சற்று குண்டாக காணப்பட்டார். இதனால் இவர் நாயகனாக நடிப்பதைவிட வில்லனாக நடிக்கவே முன்னுரிமை கொடுக்கிறார் என்ற விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் உடல் எடை குறைந்து காணப்படுவது போல் இருக்கிறார்.
விக்ரம் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி தொப்பையுடன் இருந்தார். தற்போது அவர் பதிவிட்ட புதிய புகைப்படத்தில் சினிமாவில் அறிமுகமாகும்போது ஸ்லிம்மாக இருப்பதுபோல் உள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், புதிய படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்தாரா என கருத்தும் பதிவிட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மாமன்னன் தான் கடைசி படம்: அமைச்சர் உதயநிதி