சென்னை:நடிகர் விஜய் சினிமாவை தொடர்ந்து விரைவில் அரசியலில் கால் பதிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல கடந்த சில மாதங்களாக விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக பல முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது. இதன் வெற்றி விழா சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் குட்டி ஸ்டோரி சொல்லி ரசிகர்களை கவர்ந்தார் நடிகர் விஜய்.
கடந்த சில மாதங்களாக விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் தலைமை வகித்து வருகிறார். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில அணிகளின் நிர்வாகிகள் கூட்டம், லியோ படத்தின் வெற்றி விழா என தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது வந்தன.