சட்டவிரோத பேனர் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் சுபஸ்ரீ மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரி அவரது தந்தை தொடர்ந்த வழக்கு ஆகியவை இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோயம்புத்தூரில் இளம்பெண் ராஜேஸ்வரிக்கு விபத்து நடந்த இடத்தில் கொடிக்கம்பம் இல்லை எனவும், நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் பேனர் வைக்க யாருக்கும் அனுமதி வழங்குவதில்லை எனவும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் தெரிவித்தார்.