தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி: பெண் நிர்வாகியை சந்தித்த விஜய்! - பெண் நிர்வாகி

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவருக்கு, நடிகர் விஜய் வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி: பெண் நிர்வாகியை சந்தித்த விஜய்!
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி: பெண் நிர்வாகியை சந்தித்த விஜய்!

By

Published : Oct 31, 2021, 9:13 PM IST

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளை, கடந்த 25ஆம் தேதி பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் நடிகர் விஜய் நேரில் சந்தித்தார்.

அப்போது அவர், “இது பதவி அல்ல, பொறுப்பு என்பதை உணர வேண்டும். பொதுவாழ்வில் தூய்மையையும், நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டதாக நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டது.

நடிகர் விஜய் வெற்றி பெற்ற நிர்வாகிகளுடன் எடுத்துக் கொண்ட குழு புகைப்படமும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண் நிர்வாகிக்கு, நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்த புகைப்படம் இன்று (அக்.31) வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:நாளை வீடு திரும்பும் நடிகர் ரஜினிகாந்த்?

ABOUT THE AUTHOR

...view details