தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் நீக்கம் - vijay makkal mandram secretary fired

சென்னை : விஜய் மக்கள் மன்றத்தின் அகில இந்திய செயலாளராக பொறுப்பு வகித்த ரவிராஜா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

vijay makkal mandram administrators fired
விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் நீக்கம்

By

Published : Jan 7, 2021, 3:38 PM IST

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை அகில இந்திய விஜய் மக்கள் மன்றமாக நிர்வகித்து வருகிறார். இதன் பொறுப்பாளராக ஆனந்த் என்பவர் பணியாற்றினார். இந்த மன்றத்தின் அகில இந்திய செயலாளராக ரவிராஜா, துணை செயலாளராக குமார் ஆகியோர் இருந்தனர்.

இருவரையும் பதவியில் இருந்து நீக்கி பொறுப்பாளர் ஆனந்து உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரவிராஜா, குமார் இருவரும் மக்கள் மன்றத்தின் கண்ணியத்திற்கும் கட்டுப்பாட்டுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டனர்.

மன்றத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தியதற்கும் தவறான செய்தியை பரப்பியதற்காகவும் அவர்கள் வகித்த பதவிகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க... இலங்கைவரை புதிய மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமித்த விஜய்

ABOUT THE AUTHOR

...view details