தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம்...தேதி அறிவிப்பு! - vijay in london

Vijay Makkal Iyakkam: விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செப் 9ம் தேதி பனையூரில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது

விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம்
விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 2:11 PM IST

சென்னை:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் மட்டுமல்லாமல் அரசியலிலும் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது. நடிகர் விஜய் தலைமையில் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இதனிடையே தனது விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் நடிகர் விஜய் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்.

மேலும், மக்கள் இயக்கத்தை பலப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு கட்ட திட்டங்கள் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி வளர்ச்சிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் வருகின்ற செப்டம்பர் 9ம் தேதி காலை 10.35 மணியளவில் சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது எனவும் விஜயின் உத்தரவின் பேரில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என அறிவித்துள்ளனர்.

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட மகளிரணி தலைவிகள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் விவரங்களை தங்களுக்கு ஏற்கனவே அகில இந்திய தலைமை மூலம் அனுப்பிய லிங்கில் (link) பதிவு செய்தவர்கள் மற்றும் பதிவு செய்யாதவர்கள் என அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சனாதன தர்மம் - "அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆகலாம் திட்டத்தை யார் கொண்டு வந்தது" - உதயநிதி பேட்டி!

விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், தற்போது வெளியான இந்த மகளிர் அணி ஆலோசனை கூட்டம் செய்தி விஜயின் அரசியல் பாதைக்கு இது அடுத்தகட்ட முடிவாக இருக்கும் என பலர் கூறி வருகின்றனர்.

விஜய் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 'லியோ' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதற்காக வெளிநாட்டில் 3டி தொழில்நுட்பத்தில் மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் வெங்கட் பிரபு விஜயின் புகைப்படங்கள் மற்றும் படப்பிடிப்பிற்கான அப்டேட்களை தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க:பட்டியலின பெண் சமைப்பதால் காலை உணவு திட்டம் புறக்கணிப்பா? அரசுப் பள்ளியில் கொடூரம்! சாட்டையை சுழற்றிய மாவட்ட ஆட்சியர்! நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details