நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அப்படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ் அகோரம், பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகக் கூறி, வருமானவரித் துறையினர் தமிழ்நாடு முழுவதும் அவ்விருவருக்கும் சொந்தமான 38 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
'பிகில்' வரி ஏய்ப்பு விவகாரம் - தப்பிப்பாரா விஜய் - பிகில் படம் பற்றிய செய்திகள்
சென்னை: பிகில் வசூல் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அமலாக்கத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்
!['பிகில்' வரி ஏய்ப்பு விவகாரம் - தப்பிப்பாரா விஜய் vijay](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6202514-thumbnail-3x2-vijay.jpg)
vijay
இதில், நடிகர் விஜய்,ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவன அலுவலகங்கள், பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அமலாக்கத்துறையினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் பார்க்க: இந்தியில் ரீமேக்காகும் 'சூரரைப் போற்று'
Last Updated : Feb 25, 2020, 11:27 PM IST