தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

#SaveTheniFromNEUTRINO ட்ரெண்டாக்கும் தளபதி ரசிகர்கள்! - நடிகர் விஜய்

"பிகில்" இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் #SaveTheniFromNEUTRINO ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

vijay

By

Published : Sep 26, 2019, 3:41 PM IST

நடிகர் விஜய் 'பிகில்' இசை வெளியீட்டு விழாவில், தேவையற்ற ஹேஷ்டேக்குகளை ட்ரெண்டு செய்வதை விட்டுவிட்டு சமூக பிரச்னைகளை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான ஹேஷ்டேக்குளை ட்ரெண்ட செய்யலாமே என்று தன் ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து #JusticeforSubasree, #KEEZHADIதமிழ்CIVILIZATION ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டாக்கப்பட்டது. இந்நிலையில், தேனியில் தொடங்கப்படவுள்ள நியூட்டிரினோ ஆய்வுகளை எதிர்த்து பல்வேறு அமைப்புகளும் போராடிவரும் நிலையில், அதையும் ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

twitter trending

இன்று காலை ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்திலிருந்த #SaveTheniFromNEUTRINO தற்போது இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது. சமூக பிரச்னைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தற்போது ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருவதைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details