சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய அளவில் மிகவும் முக்கியமான இசை அமைப்பாளராக அறியப்படுபவர். இந்நிலையில் இவரது ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. ஆனால், டிக்கெட் குளறுபடி காரணமாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது.
இதனால் ஏ.ஆர்.ரஹ்மான் மீது ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ஏராளமான ரசிகர்கள் உள்ளே செல்ல முடியாமல் சோகத்துடன் வீடு திரும்பினர். மேலும், கடுமையான போக்குவரத்து நெரிசலை எதிர்கொண்டு உண்மையில் அந்த நாள் அவர்களுக்கு மறக்க முடியாத நாளாக மாறியது.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி அளித்தது. மேலும், இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மானும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், யூடியூப் சேனல் ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த எல்லா குளறுபடிகளும் திட்டமிடப்பட்ட ஒன்று. அதற்கு முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர்தான் காரணம் தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானை பழிவாங்கி அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இது நடத்தப்பட்டதாக கூறியுள்ளனர்.