தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை - ரூ. 19 லட்சம் பறிமுதல்! - 19 லட்சம்

சென்னை: தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 19 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

vigilance raid in tamilnadu government offices

By

Published : Oct 25, 2019, 3:12 PM IST

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட காரணங்களுக்காக, அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் பெருமளவில் பரிசுப் பொருளாகவும், பணமாகவும் கொடுக்கப்படுகிறது என லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் 17 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் கணக்கில் வராத பணம் 19 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட தொகையின் விபரம்

இதில், சென்னை அம்பத்தூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து 4 லட்சத்து 67ஆயிரம் ரூபாயும், உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தீயணைப்புத் துறை அலுவலகத்திலிருந்து 1லட்சத்து 60ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :'பிகில்' வெறியாட்டம்...! கலவர பூமியான கிருஷ்ணகிரி

ABOUT THE AUTHOR

...view details