தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் விமர்சையாக நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி! - chennai

விஜயதசமியை முன்னிட்டு தமிழகத்திலுள்ள பல்வேறு வழிப்பாட்டு தளங்களில் இன்று (அக்.24) வித்யாரம்பம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு நெல்மணிகளில் ‘அ’ எனும் எழுத்தை எழுதி குழந்தைகளின் கல்வியை தொடங்கி வைத்தனர்.

தமிழகத்தில் விமர்சையாக நடைபெற்ற வித்யாரம்பம்!
தமிழகத்தில் விமர்சையாக நடைபெற்ற வித்யாரம்பம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 9:19 PM IST

சென்னை: தமிழகம் முழுவதும் விஜயதசமியையொட்டி 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பல்வேறு கோயில்களில், சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

சரஸ்வதி தேவி ஞானத்தின் தேவியாகக் கருதப்படுவதால், நவராத்திரியின் கடைசி நாளான (அக்.24) விஜயதசமி அன்று செய்யும் செயல், தொடங்கும் செயல் என அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன் அடிப்படையில், விஜயதசமி தினத்தன்று புதிய தொழில் தொடங்குவது, புதிய செயல்களைச் செய்வது மற்றும் குழந்தைகளுக்குக் கல்விகற்றலைத் தொடங்கி வருகின்றனர்.

அதன்படி 'வித்யாரம்பம்' எனும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இன்று (அக்.24) சிறப்பாக நடைபெற்றது. கல்வியில் சிறந்து விளங்குவதற்குத் தொடக்கச் சடங்கு தான் வித்யாரம்பம் ஆகும். இது அக்ஷராப்யாசம் அல்லது கல்வியின் புனித ஆரம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், விஜயதசமி நாளில் குழந்தைகள் கல்வியைத் தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பதால் இன்றைய நாளில் கல்வி கற்கத் தொடங்குகின்றனர்.

இதையும் படிங்க: நெல்மணியில் தமிழ்மொழி எழுதிய மழலைகள்.. வேலூரில் விமர்சையாக நடைபெற்ற வித்யாரம்பம்!

மேலும், தமிழகத்திலுள்ள வழிப்பாட்டு தளங்களான சிதம்பரம் நடராசர் கோயில், திருவாரூர் சரஸ்வதி கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சென்னையில் வடபழனி ஆண்டவர் கோயில், மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில், அண்ணாநகர் ஐயப்பன் கோயில், பட்டினப்பாக்கம் ஐயப்பன் கோயில், உள்ளிட்ட இடங்களில் விமர்சையாக கொண்டாப்பட்டது.

குழந்தைகளின் விரல் பிடித்துத் தொடக்க கல்வியை ஆரம்பிக்கும், 'வித்யாரம்பம்' நிகழ்ச்சியில், குழந்தைகளின் நாவில், தங்க ஊசி மூலம் 'அ' என்ற சொல்லும், 'ஹரி ஓம்' எனும் சொல்லும் எழுதும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த நிகழ்வு தொடங்கு முன்னதாக, அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிப்பாடானது நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டு கற்றால் நிகழ்ச்சியைத் தொடங்கினர். மேலும், பச்சை அரிசியில், அ என எழுதினார்கள். இது குறித்து மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கூறுகையில், “விஜயதசமி அன்று எந்த காரியம் தொடங்கினாலும் அது வெற்றி பெறும் என்பது ஐதீகம். அதன்படி இன்று குழந்தை உடன் இங்கு வந்துள்ளோம்.

இந்த நிகழ்வில் குழந்தைகளின் விரலை பிடித்து 'ஹரி ஸ்ரீ கணபதியே நமஹா' என எழுதியும் பச்சரிசியில் 'ஓம்' என்றும் 'அம்மா' 'அப்பா' என்றும் விரல் பிடித்து குழந்தைகளை எழுத வைத்து கல்வியை தொடங்கி உள்ளோம். இன்றைய நாளில் குழந்தைகள் கல்வியை தொடங்கினால் குழந்தைகள் படிப்பில் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையால் கோயிலுக்கு அழைத்து வந்துள்ளோம்” என அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நெல்மணியில் எழுத்து பழகும் பிஞ்சு கைகள்.. தருமபுரியில் கோலாகலமாக நடந்த வித்யாரம்பம்!

ABOUT THE AUTHOR

...view details