சென்னை: வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்தின் 3-வது வாயிலின் உள்ளே திடீரென 30-க்கும் மேற்பட்டோர் கூச்சலிட்டு கொண்டே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினர் உடனடியாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் வெளியே தள்ளி கதவை மூடினர். இதனால் காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை வேங்கைகள் கட்சித் தலைவர் அரிகிருஷ்ணன் பேசியதாவது, "சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வரக்கூடிய ராஜகண்ணு கதாபாத்திரத்தை மையப்படுத்தி, குறவர் சமூகத்தினர் குறித்து தரக்குறைவாக மருது சேனைத் தலைவர் ஆதிநாராயணன், நேதாஜி மக்கள் கழகம் தலைவர் வரதராஜன் ஆகியோர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களை உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி ஏற்கனவே விடுதலை வேங்கைகள் கட்சி சார்பாக பல மாவட்டங்களில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.