சென்னை பாரிமுனை கொத்தவால்சாவடி மார்க்கெட்டில் உள்ள பெட்டிக்கடையில் கஞ்சா போதையில் இரு இளைஞர்கள் கடைக்காரரை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கஞ்சா போதையில் இரு இளைஞர்கள் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் தராமல் கடையின் உரிமையாளரை மிரட்டி வருகின்றனர்.
மேலும் அந்த இளைஞர்கள் போலீசாரை ஆபாசமாக திட்டியும் உள்ளனர். பின்னர் கடையின் உரிமையாளரான பைசல் ரஹ்மானை இரு இளைஞர்களும் சரமாரியாக தாக்குகின்றனர். இதில் காயமடைந்த பைசல் ரஹ்மான் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்