தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீடியோ கால் மூலம் என்னிடம் புகாரளிக்கலாம் - காவல் ஆணையர் மகேஷ் குமார் - சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார்

சென்னை: மக்கள் அனைவரும் காணொலி மூலம் புகாரளிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் தெரிவித்தார்.

mahesh kumar
mahesh kumar

By

Published : Jul 2, 2020, 5:08 PM IST

சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட மகேஷ்குமார் அகர்வால் இன்று காவல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சென்னை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்ய விரும்புகிறேன். கரோனா காலம் என்பதால் பொதுமக்கள் நேரில் வந்து புகாரளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தினமும் அல்லது வாரம் இருமுறை என்னிடம் நேரடியாக தொலைபேசியிலும், காணொலி மூலமும் புகாரளிக்க வசதிகள் ஏற்படுத்தப்படும்.

மன அழுத்தம் உள்ள காவலர்களை தனியாக பிரிக்க வேண்டிய அவசியமில்லை. வருகின்ற 10ஆம் தேதியிலிருந்து காவலர்களுக்கு சுழற்சி முறையில் பயிற்சியளிக்கப்படும்.

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க நிலையான வழிகாட்டு முறை வகுக்கப்படும். ஆர்.பி.ஐ மற்றும் காவல் துறைக்கு 24 மணி நேரத்திற்குள் புகாரளித்தால் பணம் இழப்பை தவிர்க்கலாம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்க, எங்கு குற்றங்கள் அதிகம் நடைபெறுகிறது என கவனித்து அதை குறைக்க கவனம் செலுத்தப்படும்" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் தொழில் தொடங்க 5 முன்னணி மின்னணு நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்

ABOUT THE AUTHOR

...view details