சென்னை:தமிழ்நாடு காவல்துறை சார்பில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்களிடையே பெருகிவரும் நிலையில், பல்வேறு விழிப்புணர்வுகளும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு காவல்துறையின் மாநில போதைப்பொருள் தடுப்புக்கான நுண்ணறிவு பிரிவு மூலம் ட்விட்டரில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.
தேர்தலில் வாக்களிக்க வரும் நடிகர் விஜய்யை கவனிக்காமல் அருகில் இருந்த தேர்தல் அதிகாரிக்கு கைகொடுத்துச் சென்ற வாக்காளரின் வீடியோவை பதிவிட்டு, அதில் நடிகர் விஜயை போதைப் பொருளாகவும், தேர்தல் அதிகாரியை நல்ல வாழ்க்கையாகவும், கைகொடுத்துச் சென்ற வாக்காளரை போதைப்பொருள் பயன்படுத்துபவர்களாகவும் சித்தரித்து, போதைப் பொருளை இதுபோல் கவனிக்காமல் கடந்து சென்று நல்ல வாழ்க்கையை கையகப்படுத்த வேண்டும் என்ற பொருள்பட வீடியோ பதிவிடப்பட்டிருந்தது.