தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Viral Video:கையில காசு... பையில சர்டிஃபிகேட் - லஞ்சம் வாங்கும்போது வீடியோவில் லாக் ஆன அரசு ஊழியர் - தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில்

தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழை அலைக்கழிக்காமல் விரைந்து தருவதற்கு உதவியாளர் ரூ.15000 லஞ்சம் பெற்ற வீடியோ வைரலாகி வருகிறது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 11, 2023, 6:59 PM IST

Updated : Jul 11, 2023, 8:09 PM IST

Viral Video:கையில காசு... பையில சர்டிஃபிகேட் - லஞ்சம் வாங்கும்போது வீடியோவில் லாக் ஆன அரசு ஊழியர்

சென்னை:வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளர் லஞ்சம் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டையார்பேட்டை பகுதிக்கு உட்பட்ட இரட்டைக் குழி தெருவில் செயல்பட்டு வரும் தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 'வாரிசு சான்றிதழ்' வழங்குவதற்கு அரசு உதவியாளர் ஒருவர் லஞ்சம் பெற்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை காத்பாடா பகுதியைச் சேர்ந்தவர், ஞானம்-லட்சுமி தம்பதியினர். கூலி வேலை செய்து வரும் இவர்கள் தனது மாமனார் உயிரிழந்ததை அடுத்து, அவருக்கு சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தின் மூலம் விண்ணப்பித்த நிலையில், நீண்ட நாட்களாக சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

நகை அடகு வைத்த ரசீது

இதைத்தொடர்ந்து, நேரடியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டபோது, அவர்களிடம் பேசிய அலுவலகத்தின் உதவியாளர் ஒருவர் சான்றிதழ் கிடைப்பது சிரமம் என்றும்; தாசில்தாருக்கு ஏதாவது பணம் கொடுத்தால் சான்றிதழ் வெகுவிரைவில் கிடைத்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி தனக்கு தெரிந்த சூளைப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சசிகுமார் என்பவரை அழைத்துக் கொண்டு, வட்டாட்சியர் அலுவலகம் சென்றுள்ளார். இந்நிலையில், முப்பதாயிரம் ரூபாய் வரை பணம் கேட்டதாகவும், ஆனால் தங்களால் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும் என லட்சுமி தனது நகை அனைத்தையும் அடகு கடையில் வைத்து பணத்துடன் சென்றுள்ளார். பின்னர், பணத்தை வாங்கிக் கொண்டு அலுவலக உதவியாளர் தனசேகர் என்பவர், பணத்தை வாங்கி எண்ணி, சான்றிதழ் கிடைத்து விடும் எனக் கூறும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளன.

இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்: முதலமைச்சர்

அந்த வீடியோவில், 15,000 ரூபாய் மதிப்பிலான 500 தாள்களை வாங்கி அலுவலக உதவியாளர் வேகமாக எண்ணியதும், பிறகு சான்றிதழ் கிடைத்துவிடும் என்றும் கூறுவதாகவும் பதிவாகியுள்ளது. இதே போன்று இந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி பணம் கொடுத்தால் மட்டுமே அரசு இலவசமாக வழங்கும் சான்றிதழ்கள் கிடைக்கப்பெறுவதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்குத் தகவல் தெரிவித்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை எனவும் நேரில் வந்து புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பதாக வேதனைத் தெரிவிக்கின்றனர்.

பணம் கேட்கும் பட்சத்தில் பணத்தை அளிக்கும்போது கையும் களவுமாக பிடிக்க வேண்டிய லஞ்ச ஒழிப்புத்துறை மெத்தனமாக இருப்பது வேடிக்கையாக இருப்பதாகவும், சான்றிதழுக்கு இது போன்ற அதிக அளவில் லஞ்சம் வாங்கி இருக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட நபர்கள் உட்பட பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 2026 சட்டப்பேரவைத்தேர்தல்.. பனையூரில் குவிந்த நிர்வாகிகள்... விஜயின் அடுத்த மூவ் என்ன?

Last Updated : Jul 11, 2023, 8:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details