சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தில் திமுகவினர் நுழைந்து அம்மா உணவக பெயர் பலகை, ஜெயலலிதா புகைப்படத்தை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர். அங்கு உணவிற்காக வைத்திருந்த காய்கறிகளை கீழே தள்ளி நாசம் செய்துள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
முகப்பேர் அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினர் - amma unavagam
சென்னை: முகப்பேரில் அம்மா உணவகத்தை திமுகவினர் சூறையாடிய காணொலி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![முகப்பேர் அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினர் amma unavagam](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11636144-thumbnail-3x2-dmk.jpg)
முகப்பேர்
இந்நிலையில், சூறையாடப்பட்ட அம்மா உணவகத்துக்கு முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது, திமுக ஒழிக, திமுக ஒழிக என கோஷம் எழுப்பப்பட்டது.
முகப்பேர் அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினர்
மேலும், திமுகவினரின் அராஜகத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டிடிவி தினகரன் உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Last Updated : May 4, 2021, 2:00 PM IST